யாழ்ப்பாணத்துக்கும் தென்னிலங்கைக்குமான போக்குவரத்து மார்க்கங்களில் முக்கியமான ஒன்றாக புகையிரத போக்குவரத்து காணப்பட்டது.இது 1990களில் யுத்தம் காரணமாக முற்றாக நிறுத்தப்பட்டது. இந் நிலையில் தற்போது யுத்தம் முடிவடைந்து 2வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் புனரமைப்பு வேலைகள் எவையும் இடம்பெறாத நிலையிலேயே யாழ் புகையிரத நிலையம் உள்ளது.
இதே வேளை 2011ம் ஆண்டுடன் புகையிரத புனரமைப்பு வேலைகள் யாவும் முடிவடைந்து விடும் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட போதும் தற்போது வவுனியாவில் இருந்து ஒமந்தை வரையிலான முதலாம் கட்ட புனரமைப்பு வேலைகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. ஓமந்தையில் இருந்து பளை வரையான இரண்டாம் கட்ட புனரமைப்பு வேலைகள் எவையும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. இந் நிலையில் முழுமையான புனரமைப்பு வேலைகள் யாவும் முடிவடைந்து யாழ்ப்பாணத்திற்க்கும் தென்னிலங்கைக்குமான புகையிரத போக்குவரத்து சேவைகள் மீளவும் ஆரம்பிக்கப்படும் நாள் எப்போதோ?
Subscribe to:
Post Comments (Atom)




0 comments:
Post a Comment