யுத்தம் நடைபெற்ற இடங்கள் எவளவு தான் மாற்றம் அடைந்தா லும் அதனுள் சிக்குண்ட மக்களின் ரணம் ஆறாத நிலையிலேயே உள்ளது. இந் நிலையில் தான் யாழ் ப்பாணம் புகையிரத நிலையத்தில் குடியிருக்கின்ற மக்களினை சந்தி த்து இவர்களுடன் கதைத்த போது தான் இவர்கள் கடந்து வந்த பாதைகளும் ,கடந்து கொண்டிரு க்கின்ற பாதைகளும் எவ்வளவு துயரம் நிறைந்துள்ளது என்பது புரிகின்றது.
1992ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பலாலியை சொந்த இடமாகக் கொண்ட இவர்கள் தமது சொந்த இடங்களை விட்டு இரவோடு இரவாக வெளியேறினார்கள். இன்றுடன் 26 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் இவர்கள் தமக்கென்று ஒரு இருப்பிடங்களோ உதவிகளோ இன்றி அல்லாடுகின்றார்கள்.
பலாலியை விட்டு 1992ம் ஆண்டு இடம்பெயர்ந்த இவர்கள் சுதந்திர புரம் , உறவினர்கள் வீடுகள் போன் ற இடங்களில் குடியேறினார்கள். பிற்பட தற்போது 3 வருடங்களாக யாழ்ப்பாணம் ரெயில்வே நிலையக் கட்டடங்களிலும், அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளிலும் சுமார் 68 குடும்பங்கள் வரை குடியுள்ளார்கள்.
இங்குள்ள ஒவ்வொரு குடும்பங்களும் யுத்தத்தில் ஏதோ ஒன்றையாவது இழந்தவர்களாகவே காணப்படுகின்றானர். இவர்களை பார்க்கும் போதும் எல்லோர் மனங்களும் கனத்து விடுகின்றது. சிறிதா அமைக்கபட்டுள்ள ஒவ்வொரு குடிசைகளுக்குள்ளும் பத்து பேர் வரை வாழ்ந்து வருகின்றானர். மேலும் மலசலகூட வசதிகளோ குடி தண்ணீரோ இங்கு எல்லாக்குடும்பங்களுக்கும் கிடைக்க கூடியதாகவும் இல்லை. அங்குள்ள கிணறகளையும் மலசலகூடங்களையும் பாவித்தே 3 வருடங்களாக தமது வாழ்க்கையை ஒட்டி வருகின்றானர். இங்குள்ள ஒவ்வொரு குடும்பங்களும்; கடந்து வந்த அவலங்களை அவர்களினை பார்க்கும் போதே எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.
இரு கால்களையும் கைகளையும் இழந்த மனைவியுடன் 3 வயது குழந்தை தன்னுடைய ஒற்றை காலில் நின்றபடி தங்களது எதிர்காலத்தை நினைத்து ஏங்கி நிற்கும் சிவராம் இவ்வறாக தன்னுடைய துன்பங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார். “பலாலியை சொந்த இடமாகக் கொண்ட நான் எமது சொந்த இடத்தில் நிம்மதியாக வாழ்ந்து வந்தேன்.1992ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் திகதி எமது வீட்டின் மீது விழுந்த செல்லினால் இன்று உறுப்புக்களையும் உடைமைகளையும் இழந்து இன்று எந்தவிதமான எதவிகளும் இன்றி நிற்கதியாக நிற்கின்றேன். எனது குடும்பத்தின் அன்றாட உணவுக்கு கூட காசு இல்லாது இருந்த போது ஒரு தனியார் நிறுவனம் தந்த உதவியது மோட்டார் சைக்கிளை வைத்து கொடிகாமம் சென்று தேங்காய் வாங்கி வந்து யாழ்ப்பாணத்தில் விற்று அன்றாட வாழ்ககையை போக்கி கொண்டிருக்கிறோம். எங்களுக்கு 3 வயதில் உள்ள எமது பெண் குழந்தையின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து தான் நாங்கள் அதிகம் கலங்குவதுண்டு. ஒரு நிரந்தர இருப்பிடம் தொழில் எதுவுமின்றி எப்படி இந்த உலகில் எமது பிள்ளையை வாழ வைப்பது எண்டு? ” ஏக்கத்துடன் வினா எழுப்பி நின்றார்.
இந் நிலையில் இங்கு வசித்து வரும் மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள பிரச்சனை என்னவென்றால் புகையிரத புனரமைப்பு வேலைகள் இடம்பெற உள்ளதால் இவர்களை தற்போது இங்கிருந்து வெளியேறுமாறு 3 தடவைகள் அறிவிக்கப்பட்டமையே ஆகும். இது பற்றி இற்கு இருக்கும் நிமலன் என்பவர் குறிப்பிடுகையில்," எழும்பு எழும்பு என்டு தொடர்ந்து எங்களை கலைத்தால் நாங்க எங்கே போவது? ஏமக்கு என்டு கட்டாயம் ஒரு இடத்தில் இடம் ஒதுக்கி தர வேண்டும். அல்லது எமது சொந்த இடத்திற்க்கு எங்களைவிட வேண்டும். இல்லா விடின் இந்த இடத்தை விட்டு நாம் கட்டாயம் எழும்ப போவதில்லை” என்று கூறினார்.
இப்படியான நிலையில் வாழ்ந்து வரும் இம் மக்களை பல பேர் வந்து பார்த்து செல்லுவதே ஒழிய இவர்களது நலனைப்பற்றி யாருமே சிந்திக்கவில்லை. இதனால் இவர்க ளது வாழ்க்கையில் எந்த விதமான மாற்றமோ, முன்னேற்ற மோ இது வரை ஏற்படவில்லை என்பதே வேதனைக்குரிய விடயமாகும். 






0 comments:
Post a Comment