மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற அரியாலை கிழக்கு பிரதேச மக்கள் 16 வருடங்களின் பின் மீளக்குடியேறி உள்ளனர். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நாவலடி,
பூம்புகார் ஆகிய இடங்களை உள்ளடக்கிய இம்மக்கள் தற்காலிக வீடுகளை அமைத்து மீள் குடியேறி யுள்ளார்கள். இவர்களுக்கென இந்தி ய அரசாங்கத்தின் வீட்டுத் திட்டத் தின் படி 50 வீடுகள் கட்டித் தருவ தாக கூறப்பட்டு கிந்துஸ்தான் பிறைவற் லிமிட்டட் நிறுவனமான து இதனை செயற்படுத்தி வருகின் றது.
ம்பம், இறுதி யுத்தின் போது பாதிக்கப்பட'டோர் என்ற அடிப்படையிலேயே குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டது. மூன்று மாத கால வரையறைக்குள் முடிவடையும் எனக் கூறப்பட்டிருந்தாலும் இது வரையிலும் எந்த வீடுக ளும் பூரணமடையாத நிலையில் உள்ளது. இது பற்றி கிந்தஸ்தான் நிறு வனப் பணியாள் மழைகாலம் என்பதனால் வீடுகட்டுவதில் தாமதம் ஏற்படுவதாக கூறினார்.
மக்களிடம் பணம் எதனையும் கையளிக்காது இந்நிறுவனத்தின் மூலமாகவே வீட்டுத்திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் படி முதலாம் கட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களது வீடுகளே இன்னும் பூர்த்தியடை யாத நிலையில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு என பதிவுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. எனினும் உரிய முறையில் படிவங்கள் எதுவுமற்ற விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றது என யோன்சன் என்பவர் குறிப்பிட்டார்.
வயற்கரை ஓரமாக எங்களது குடியிருப்புகள் அமைந்து ள்ளதால் தற்Nபாது வெள்ளத்துக்கு மத்தியி லேயே வசித்து வருகின் றோம். இதனால் இரவு நேரங்களில் அடிக் கடி பாம்பு, பூச்சிகள் வருவத னால் குழந்தைகளை வைத்துக் கொண்டு நிம்மதியாக தூங்கவே முடியவில்லை. இது மட்டு மல்லாது இங்க நுளம்புகளும் அதிகம். இதனால் பிள்ளைகளுக்கு அடிக்கடி வருத்தங்கள் வந்தபடியுள்ளது என்று ராகினி குறிப்பிட்டார்.
புதிதாக மீளக்குடியேறியுள்ள இம் மக்கள் தாம் எதிர் கொண்டு வரும் இப்பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும் நாள் எப்போது? என்ற எதிர்பாப்புடனேயே இன்றுவரை வாழ்ந்து வருகின்றமை சோகமான ஒரு விடயமாக உள்ளது.




0 comments:
Post a Comment