NeoCounter

NeoCounter

Thursday, December 15, 2011

இந்திய மண்ணில் ஈழத்து மக்களது அவல வாழ்க்கை


மானிட உரிமைகள் எங்கு இழக்கப்படுகின்றதோ அங்கேயே நாம் மனித உரிமைகள் பற்றி பேச வேண்டியுள்ளது. இந் நிலையானது இன்று இந்தியாவில் வாழ்கின்ற எமது ஈழத்து அகதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு எல்லா விதமான உரிமைகளும் மறுக்கப்பட்டு உடைமைகளையும் உறவுகளையும் இழந்து அகதிகளாக தஞ்சம் கோரி இவர்கள் இந்தியா சென்றனர். இன்று அவர்கள் ஒரு துயரம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள்.


அங்கு இருப்பதற்க்கு என ஒரு நிலையான இடமோ குடிநீர் கழிப்பறை வசதிகளோ எவையும் இன்றி அன்றாட வருமானத்தை பெற்று வாழ்வதற்க்கு கூட வழியில்லாது தமது ஒவ்வொரு நான் பொழுதுகளையும் பல போரட்டங்களின் மத்தியில் கழித்து வருகின்றார்கள்.

தமது சொந்த நாட்டில் நிம்மதியாக வாழ்ந்து வருகின்ற காலத்தில் கொடிய போரினால் உடைமைகளையும் உறவுகளையும் இழந்தது மட்டுமில்லாது பல்வேறு பட்ட அச்சுறுத்தல்களினாலும் உயிரை மட்டுமாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று இந்தியாவுக்கு கடல் வழியாக இந்தியாவுக்குச் சென்றார்கள்.

இன்று குறிப்பாக 115 முகாம்களில் 79000 க்கு மேற்பட்ட மக்களும் 2 சிறப்பு முகாம்களில் 200 க்கு மேற்ப்பட்ட மக்களும் வாழ்ந்து வருகின்றார்கள். இவ்வாறு நெருக்கமாக வாழ்ந்து வருகின்றார்கள். இவ்வாறு நெருக்கமாக வாழ்ந்து வரும் இவர்கள் வரதட்சணை கொடுமை பண்பாட்டுச் சீரழிவு எனப் பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றார்கள்.

 இங்கு பல பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணங்கள் செய்யப்பட்டு குறுகிய காலத்திற்க்குள்ளேயே வரதட்சணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தப்படுகின்ற அதே வேளை வரதட்சணை இன்மையால் திருமணம் செய்யாது கூட பலர் வாழ்ந்து வருகின்றார்கள். மேலும் தமது ஒரு வேளை உணவுக்கு கூட பணம் இன்மையால் இவர்கள் தவறான வழிகளையே நாடுகின்றார்கள். இதனால் இங்கு பண்பாட்டுச் சீரழிவுகள் பல தலை தூக்கி உள்ளது.

இவ்வாறு பலவாறான பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வரும் இம் மக்களை எந்த ஒரு ஊடகமும் முக்கியத்துவம் கொடுக்காது விட்டு அவர்கள் செய்யும் சிறியதான ஒரு தப்பை மட்டும் பெரிதாக சுட்டிக்காட்டி ஈழத்தமிழர்கள் தவறு செய்பவர்கள் அவர்கள் தவறானவர்கள் என்பதை மட்டுமே  மறைமுகமாக சுட்டிக்காட்டி வருகின்றன.

மேலும் இவர்கள் தங்களுக்கு அவசர உதவியாக கழிப்பறை வசதிகள் செய்து தரும் படி கேட்ட போது அரசியல் கட்சிpத் தலைவர்கள் இவர்கட்க்கு கொடுத்தது கலர் ரீவி. இங்கு பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் கொடுமைகளை தட்டிக் கேட்கவென எல்லா முகாம்களுக்கும் பொதுவாக கலைக்குழு உருவாக்கப்பட்டது. இக் குழு உருவாக்கப்பட்டு குறுகிய காலத்திற்க்குள் கட்சிகள் சார்ந்த முக்கியஸ்தர்களால் அரசியல் நோக்கம் கருதி நிறுத்தப்பட்டு விட்டதாக கூறுகின்றார். இவ்வாறு ஈழத்தமிழர்களுக்காக  குரல் கொடுத்து வரும் அருட் தந்தைகுழந்தை இவர்கள் குறிப்பிடுகின்றார்.

மானிட உணர்வுகள் இன்றி இருக்கும் அச் சமூகம் நிச்சயம் ஒரு நாள் தமது உணர்வுகளையும் புரிந்து கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் இன்றும் கூட நமது சொந்த நாட்டுக்கு கூட திரும்பாது இவ் அகதிகள் வாழ்ந்து வருகின்றார்கள்.

0 comments:

Post a Comment