முற்றத்து கண்ணாடி முகம்காட்டத் துடிக்குது
வாடி நின்ற பயிருக்கு வான்மழையாக வந்து நின்ற சுவிஸ் நாட்டின் உடைய SDC நிறுவனத்தின் வீடமைப்புத் திட்டத்தினருக்கு நன்றி என்று கையெடுத்து தனது கருத்தை ஆரம்பித்தாள் இப் பிரதேச சாதாரண கூலித்தொழிலாளியான ஜெயராணி.
“ஒரு சாதாரண விவசாயியாலேயோ அல்லது கூலித் தொழிலாளியா லேயோ ஒரு வீட்டைக்கட்டுவது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாது. இருந்தாலும் நாங்கள் மீளக்குடியேறி சில மாதங்களிலேயே கல்வீட்டில இருக்கிறம். இது நாங்கள் செய்த புண்ணியமே” என்று தனது சந்தோசத்தை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
சொந்தங்களையும் சொந்த இடங்க ளையும் விட்டு தொலைதூரம் சென்ற உறவுகள் பல சோதனைகளை கடந்த நிலையில் தற்போதே மீளக்குடியேறி வருகின்றார்கள். இவர்கள் காலடி எடுத்து வைக்கின்ற இடங்கள் இன்று வாழத்தகுதியற்றதாக உள்ள போதும் தமது சொந்த இடங்களில் காலடி எடு த்து வைத்த பூரிப்பு இவர்களது துயரங் களை எல்லாம் துகள்களாக மாற்றிய மைத்துள்ளது.
இவர்களது கடந்த கால வாழ்க்கையின் நினைவுச் சின்னங்களாக இன்று எஞ்சியிருப்பது வீட்டின் சுவர்களும் அத்திவாரங்களுமே. இச் சுவர்களின் பக்கத்தியிலேயே இன்று குடில் போன்ற குடிசைகளை அமைத்து குடியேறி வருகின்றார்கள்.

இருள் மயமாக இருக்கும் இம் மீள்குடியேற்றங்களின் மத்தியில் இன்று மின்மினிப்பூச்சியாக மாற்றம் பெற்றுள்ள ஒரு பகுதியே மறவன் புலோ பிரதேசம் ஆகும். தென்மராட்சி- சாவகச்சேரி பகுதியில் இருந்து மூன்றரைக் கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இப் பகுதியானது 1999 ம் ஆண்டு இப்பகுதியில் இடம்பெற்ற யுத்தம் இவர்களை அகதிகளாக இடம்பெயர வைத்தது. தற்போது 12 வருடங்களின் பின்னர் 434 குடும்பங்களைச் சேர்ந்த 1602பேர் மீளவும் தமது சொந்த இடங்களில் மீண்டும் மீளக் குடியேறியுள்ளார்கள்.
இக்கிராம மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பின்னடைவான நிலையில் இருப்பவர்கள். ஏனெனில் இவர்களது அடிப்படைத் தொழிலாக விவசாயமும் கூலித்தொழிலுமே காணப்படுகின்ற அதேவேளை இன்று யாழ்ப்பாணத்தில் அதிகளவான விதவைப் பெண்கள் இப் பகுதியிலேயே வாழ்ந்து வருகின்றார்கள்.
இப் பகுதியில் யுத்திற்க்கு முன்னர் பல மக்கள் கொட்டில்களிலும் ஒரு சிலரே கல்வீடுகளிலும் வசித்து வந்தனர். ஆனால் யுத்ததின் பின்னர் வழங்கப் பட்டுள்ள கல் வீடுகள் இவர்களிடையே பெரும் மனச்சந்தோசத்தை ஏற்படுத்தி யுள்ளது. வீடு ஒன்றிற்க்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூரணம் இன்று செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இவர்களிடையே இப்படியான சந்தோசம் காணப்பட்டாலும் சில ஏக்கங்களும் இன்று தொடருகின்றது. இதன் பிரதிபலிப்பு கடந்த சில நாட்களாக இப்பிரதேச சிறுவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த புகைப்படப் பயிற்சியில் மாணவர்கள்; வரைந்த வரைகலைகள் வெளிப்படுத்தி நின்றன.

வீடுளில் இருந்து பல மைல் தூரம் நடந்து செல்லும் இவர் களுக்கு இன்றுவரை எந்த விதமான போக்கு வரத்து சேவைகள் செய்து கொடுக்க ப்படவில்லை. இவர்கள் நாளாந்தம் பயணம் செய்யும் வீதிகளோ இன்றும் குன்றும் குழியுமாகவே உள் ளது. மேலும் இக் கிராமத்தில் இந் து மக்களே வாழ்கின்றார் கள். இங்குள்ள இந்து ஆலய ங்களோ இன்றும் பாழடைந்த் நிலையிலேயே உள்ளது. இதனால் ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண் டாம்” என்ற முதுமொழி இவ்ஊருக்கு பொருத்தமானதா? ஏன்ற சந்தேகத்தைவரவழைத்துள்ளது.
“சுண்டங்காய் காற்பணம் சுமை கூலி முக்காற் பணம்” என்பது போல பல முயற்சிகளின் மத்தியில் இவர்கட்க்கு SDC நிறுவனம் வழங்கிய நான்கு கணணிகள் மாணவர்களது பிஞ்சு விரல்கள் பட முன்பே கயவர்களால் களவாடப்பட்டு சில தினங்களுக்கு முன்பே இது மீளவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
“சுண்டங்காய் காற்பணம் சுமை கூலி முக்காற் பணம்” என்பது போல பல முயற்சிகளின் மத்தியில் இவர்கட்க்கு SDC நிறுவனம் வழங்கிய நான்கு கணணிகள் மாணவர்களது பிஞ்சு விரல்கள் பட முன்பே கயவர்களால் களவாடப்பட்டு சில தினங்களுக்கு முன்பே இது மீளவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப் பகுதியில் உள்ள சகலாவல்லி வித்தியாலயத்தில் உள்ள மாணவர்களில் பலர் தாய்தந்தையை இழந்த நிலையில் பல்வேறுபட்ட கஸ்ரங்களின் மத்தியிலேயே கல்வி கற்று வருகின்றனர். மேலும் பல பிள்ளைகளின் பெற்றோர் சாதாரணகூலித் தொழிலாளிகளாகவே காணப்படு கின்றனர். தமது பாடசாலை கல்வி மட்டுமே தம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்க போகின்றது என்ற ஆவாவுடன் கஸ்ரங்களையும் பொருட் படுத்தாமல் இந்த பிஞ்சு உள்ளங்கள் தமது கல்வியை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
மின்மினிப்பூச்சி விட்டு விட்டு ஒளிர் கின்ற போதும் அது தொடர்ச்சியாக ஒளிர்வது போன்றே எல்லோருக்கும் தென்படும். அது போல் இங்கு உள்ள மக்களிடையே பல துயரங்கள் இழை யோடியுள்ள போதும் வெளித் தோற்ற த்தில் காணப்படும் கல் வீடுகளே இன்று இவர்களது நிலையை நிர்ணயி ப்பதாக உள்ளது.






0 comments:
Post a Comment