யாழில் தொய்வடையும் நெசவு உற்பத்தி
பாரம்பரியமாக ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகோலாக இருப்பது சுயதொழில் உற்பத்தியே ஆகும். இவ் உற்பத்திகளில் யாழ்ப்பாணத்தில் பாரம்பரியமாக நெசவு உற்பத்தி காணப்படுகின்றது. இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வந்த நெசவு உற்பத்தியானது இலங்கைக்கு அந்நியரின் வருகையுடன் எடுத்து வரப்பட்டது.
இந்த வகையில் 1960களில் யாழ்ப்பாணத்தில் பூர்வீகமாக ஆரம்பிக்கப்பட்ட நெசவு உற்பத்தி யானது பல நூற்றுக்கணக்கான கிளைகளைப் பரப்பி ஆல விருட்சம் போல் பரந்து காணப்பட்ட து. இதனால் அக்கால கட்டத்தில் பொரு ளாதார ரீதியிலும் பல மாற்றங்கள் ஏற்படவும் இது அடிப்படையாக காண ப்பட்டது. இருப்பினும் பிற்பட்ட காலங் களில் ஏற்பட்ட சமூக,அரசியல் மாற்றங்கள் காரணமாக நெசவு தொழிற்துறை யானது முற்றாக அழிந்தவிடும் தறுவாயை எட்டியுள்ளது. தொழிற்துறை ஆனது ஒரு வீழ்ச்சிப் பாதையை நோக்கி நகரத் தொடங்கியது. இன்று இத் 1967களில் யாழ்ப்பாணப் பகுதியில் நூற்றுக்கணக்கான நெசவு உற்பத்தி நிலை யங்கள் காணப்பட்டன. தற்போது 19 நெசவு உற்பத்தி நிலையங்களே காணப் படுகின்றன. இதற்கு பலவித காரணங்கள் முன் வைக்கப்படுகின்றது.
இந் நிலையில் இவ் உற்பத்தியின் இன்றைய நிலை பற்றி கரவெட்டி நெசவு நிலையத்தின் பொறுப்பாளர் திருமதி .வைத்திலிங்கம் குறிப்பிடுகையில்," இந்தியரின் வருகையினாலும் அவர்கள் தமது உற்பத்திகளை பல விதமான விளம்பரங்கள் விற்பனை தந்திரங்கள் என்பவற்றாலும் தமது உற்பத்திகளை இங்கு விற்பனை செய்யத் தொடங்கினர். குறிப்பாக எமது மக்களும் அதன் பால் கவரப்பட்டதனால் அவர்களும் பெருமளவில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளையே வாங்கவும் தொடங்கினர். இதனால் எமது ஆடை உற்பத்திகள் வீழ்ச்சியடையத் தொடங்கி விட்டன.
குறிப்பாக யாழ்ப்பாண நெசவுத் தொழிற்சாலைகளை பொறுத்த வரையில் 6 மாத பயிற்சி நெறிக்காக சேர்க்கப்படுகின்ற மாணவர்களே இங்கு தொழில் செய்கின்றனர். ஒரு நெசவு நிலையத்தில் 10 அல்லது 11 பேர் ஒரு தரத்தில் இணைந்த கொள்வார்கள். பிற்பட பலர் நின்ற கடைசியில் 5 அல்லது 6 பேர் இங்கு வருவார்கள். இவர்களுக்கு 6 மாத காலத்திலும் ஒரு நாளைக்கு 21 அடி துணி அடித்தால் 200ரூபா பணம் கொடுக்கப்படும். அத்தோடு இவர்களுக்கு பயிற்சியின் பின் உறுதிப்படுத்தப்படக் கூடிய வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் இன்று இல்லாமல் போய் விட்டது. மேலும் 6 மாத காலப் பயிற்சியின் பின் ஒரு நெசவு நிலையத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு என்பதும் கொடுக்கப்படுவதில்லை.
அத்துடன் இத் தொழிலானது மிகவும் கஷ்டமானதாகும். உடம்பை வருத்தி யே வேலை செய்ய வேண்டியுள்ளது. வேறு நாடுகளில் கஷ்டப்பட்டு செய்யும் தொழிலுக்கு அதிகளவு சம்பளம் கொடுக்கப்படும். ஆனால் இங்கு இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 200ரூபா படி மாதம் 4000ரூபா கொடுக்கப்படுகிறது. இதனாலும் இவர்கள் இத் தொழிலில் ஆர்வம் காட்டாது விட்டு விடுகின்றார்கள்.
அவர் மேலும் கூறுகையில், இங்கு உற்பத்தி செய்யப்படும் உடைகள் உள்ளுரிலும் வெளியூரிலும் விற்பனை செய்யப் படுகின்றன. குறிப்பாக ஏ9 பாதை திறக்கப்பட்டதன் பின் இதன் விற்பனையும் சிறிதளவு அதிகரித்துள் ளதாகவும் கூறினார். இவர்கள் 8வீத வருட இலாபத்துடன் தான் இத் தொழி லையும் செய்து வருகின்றார்கள். இங்கு உள்ளுரில் உற்பத்தி செய்யப்ப டுகின்ற துணி வகைகள் குறைத்து 5 அல்லது 6 வருடங்கள் பாவிக்கும் தன்மை கொண்டவை. குறிப்பாக இதனை முதியோர்களே பெருமளவில் பாவிக்கின்றனர். ஏனெனில் கைதடி முதியோர் இல்லமானது வாடிக்கையாக இங்கிருந்தே துணி வகைகளை பெற் றுக் கொள்கின்றார்கள். தற்போது ஒரு வருட காலமாக நூல் அனுப்பப்பட வில்லை. இதனால் மாணவர்களிற்கான பயிற்சிகளும் இடை நிறுத்தப்பட்டு ள்ளன. இது பற்றி நெசவு பயிற்சி பெறும் ம.கலையரசி குறிப்பி டுகையில்." தரமான நெசவு துணிகள் தற்போது இங்கு உற்பத்தி செய்யப்பட வில் லை. கலாச்சார மாற்றத்திற் க்கு ஏற்ப துணி வகைகள் இங்கு கிடைக்கப்ப பெற வில்லை என்பதனாலேயே மக்கள் வெளிநாட்டுத் துணி களின் பால் ஈடுபாடு காட்ட ஆரம்பித்துள்ளனர்" என்று குறிப்பிட்டார். படித்தும் தொழில் வாய்ப்பற்ற பல இளைஞர் ,யுவதிகள்
தற்போது அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறான சுய தொழில்களினை ஊக்கிவிப்பது அவர்களுக்குரிய சிறந்த வழிகாட்டலாகும். மேலும் நவீனத்துவம் எவளவு தான் வளர்ச்சியடைந் தாலும் எம் முன்னோர்கள் பின்பற்றிய முறை அழிவடையாமல் பாதுகாக்க வேண்டியதும் எமது கடமையே..








0 comments:
Post a Comment