கனவுகளை விழுங்கும் காப்பகங்கள்
கனவுகளை விழுங்கும் காப்பகங்கள்
போர்ச்சூழல்,
வாழ்க்கைச் செலவு, குடும்ப வறுமை என்பன ஒவ்வொரு வரையும் அவரவர்
வாழ்க்கைத் தரத்தில் இருந்து மாற்றிக் கொண்டி ருக்கிறது. யாழ் மாவட்டத்தில் இந் நிலை உருவாக
முக்கிய காரணம் போர். இதன்
வழித் தோன்றல் இன்று பலரை
அநாதைகளாகவும் , குடும்பத்தை விட்டு பிரிந்து நிற்பதற்கும்
சாதகமாக அமைந்து விட்டது.
எனினும்
இன்று உறவுகள் கூடவே இருக்க
பெற்றோர் தவிர்க்க முடியாத காரணங்களால் சிறுவர்களை சிறுவர்
இல்லங்களிலும் காப்பகங்களிலும் விடும் பழக்கம் அதிகரித்திருப்பதை
காணக்கூடியதாக உள்ளது.
நான் சந்தித்த திவ்வியன் என்னும் சிறுவனும் 9வருடங்களாக
காப்பகம் ஒன்றில் இருந்து கடந்த
வருடமே தனது பெற்றோருடன் மீளவும்
இணைந்துள்ள இவன் தனது உள்ளக்
கிடக்கையை எம்மிடம்
கொட்டித் தீர்த்தான்.
‘“நான் நல்லா படிக்கனும்.
விளையாட வேணும். என்னுடைய திறமைகளை
நான் வெளிப்படுத்தவேனும். அம்மா, அப்பா தங்கச்சியோட
இருக்கனும் . நான் இவளவு காலமும்
இருந்த இடம் எனக்கு ஒரு
ஜெயில் மாதிரி இருந்துச்சு . எனக்கு
அங்க இருந்த ஒருத்தரயும் பிடிக்கல்ல.
நான் இனி ஒரு காலமும் அங்க
போகவே மாட்டன்.” என்று தனது மனக்குமுறலை
எம்மிடம் கொட்டித் தீர்த்தான் பதினைந்தே வயதுடைய திவ்வியன்.
ஓன்பது
வருட காலமாக முத்துத்தம்பி காப்பகத்தில்
இருந்து சென்ற வருடமே தனது
பெற்றோருடன் மீளவும் இணைந்து கொண்டான் திவ்வியன். இவன் சாதாரண கூலித்
தொழிலாளர் குடும்பத்தின் நான்காவது பிள்ளை. எட்டு பேரை
கொண்ட குடும்பத்தில் இவனுக்கு ஐந்து சகோதரர்கள். சாதாரணமாக
சாப்பாட்டு செலவைக் கூட ஈடுகட்ட
முடியாது திண்டாடிய இவனது தந்தை இவனது
கல்வி ஆர்வத்தை பார்த்து விட்டு இவன் எதிர்காலத்தில்
நல்ல ஒரு நிலைக்கு வர
வேண்டும் என எண்ணி ஐந்து
வயதேநிரம்பிய வேளை அவனை காப்பகத்தில்சேர்த்துவிட்டார்.
“நான் கூலி வேலைக்கு சென்று
உழைத்து வரும் பணம் சாப்பாட்டுக்கே
காணாமல் இருந்திச்சு. அது மட்டும் அல்லாது
என்ர மூத்த பிள்ளையள் இரண்டும்
தங்கட படிப்பை குழப்பிய வண்ணம் இருந்தனர். இதனால்
இவனாவது படிச்சு நல்ல நிலைக்கு
வர வேண்டும் என்ற எண்ணத்தில் இவனை
காப்பகத்தில் சேர்த்து விட்டேன்”என்றார் திவ்வியன் தந்தை
செ .செல்வலிங்கம்.
காப்பகத்திற்க்கு
அடிக்கடி சென்று பார்த்து விட்டு
வந்த இவனது பெற்றோர் தொடர்சியாக
குடும்பத்தில் எற்பட்ட பிரச்சனை காரணமாக
சில வேளைகளில் மட்டுமே சென்று பார்த்து
வந்தனர். இதனால் இவன் மன
ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். சிறு வயதிலேயே தந்தை
தாயின் அரவணைப்பில் இருந்த இந்ந பிஞ்சு
உள்ளம் பெற்றோரின் இத்தீடீர் முடிவால் மேலும் பாதிக்கப்பட்டது.
“எல்லாப்
பிள்ளையளை போல இவனும் படிப்பான்.
ஆனால் யாரோடும் எப்போதும் சேரமாட்டான். தனியே இருந்து அழுதுகொண்டே
இருப்பான். அடிக்கடி கோபப்படுவான். தன்னை இக்காப்பகத்தை விட்டு
வெளியே அனுப்ப வேண்டும் என்ற
எண்ணத்துடன் பல குழப்படி வேலைகள்
செய்யும் பழக்கம் இவனிடம் காணப்பட்டது” என்று குறிப்பிட்டார் காப்பக
முதுநிலை பராமரிப்பாளர் செல்வமலர்.
இந்நிலையில்
கடந்த வருடம் மீளவும் தனது பெற்றோருடன் வந்து இணைந்து
கொண்ட இச் சிறுவன் இன்று பல வழிகளில் திறமைகளை
வெளிப்படுத்தி வருகிறான். பாடசாலை ஒன்றில்இணைந்து தனது
கல்வியைத் தொடர்வதுடன் கல்வியிலும் தனது திறமையைக் காட்டிவருகிறான்.
“திவ்வியன் பாடசாலைக்கு வந்து சேர்ந்த போது
கல்வியில் குறைவான மட்டத்தில் காணப்பட்டான்.
இன்று வகுப்பில் இரண்டாம் நிலை மாணவனாக உள்ளான்.
மேலும் பாடசாலை மட்டத்தில் உள்ள உதைப்பந்தாட்ட அணியில்
துணைத் தலைவராக இருக்கின்றான். இவனுக்கு
சித்திரம் வரைவதில் மிகவும் ஆர்வமான நிலை
உள்ளது. இவனது திறமையைபார்த்த சித்திர
ஆசிரியர் தனது சொந்த செலவில்
இவனை சித்திர வகுப்புக்கு அனுப்பி
வருகின்றார். இருந்தாலும் ஒரு சின்ன வருத்தம்
அவன் பாடசாலையின் மாணவத் தலைவர் பதவி
ஏற்று சில நாட்களிலேயே தன்னால்
பாடசாலைக்கு நேரத்துக்கு வர முடியாது எனக்
கூறி பதவியை விட்டு விலகி
விட்டான் ”என்றார்
இவனது வகுப்பாசிரியர். இச் சிறுவனை சிறுவர்
காப்பாகத்திலிருந்து மீண்டும் பெற்றோருடன் இணைத்த சேவலங்கா கள
உத்தியோகத்தர் திலீபன் தெரிவிக்கும் போது
“சிறுவர்கள் எப்போதும் பெற்றோரின் தலைமையின் கீழ் வாழ வேண்டியவர்கள்.
அவர்கள் தமது பாதுகாப்பு கவசமாக
முதலில் எண்ணிக் கொள்வது தமது
பெற்றோரையே. இன்று சிறுவர் இல்லங்களே
சிறுவர்களுக்குரிய முழுமையான பாதுகாப்பை வழங்குகின்றனவா என்பதையே உறுதிப்படுத்தப்பட முடியாத சுழலில் பிள்ளைகள்
நல்லமுறையில்அங்கு படிக்க முடியும். அவர்கள்
அங்கு பாதுகாப்பாக இருப்பார்கள் எனபதனை எவ்வாறு கருதி
விட முடியும்.
சிறுவர்கள்
குறிப்பிட்ட ஒரு கட்டமைப்புக்குள் வனர்க்கப்பட
வேண்டும். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நூறு இருநூறு சிறுவர்கள்
ஒரே இடத்தில் தூங்க கூடியவாறான அமைப்பிலேயே
சிறுவர் இல்லங்கள் உள்ளது. இது குடும்ப
கட்டமைப்பு போன்று ஐந்து அல்லது
ஆறு பேர் தூங்கக் கூடியதான
இடமாக மாற்றப்பட வேண்டும். இதன் போதே அவர்கள்
தமது பிரச்சனையை மற்றோரிடம் வெளிப்படுத்தவும் இதமக்கு பாதுகாப்பு உள்ளது
என்ற உணர்வும் அவர்களிடம் தோன்றும். இதுவே அவர்களது உள
ரீதியான பிரச்சனையை குறைப்பதற்குரிய சிறந்த வழியாக அமையும்’எனவும் குறிப்பிட்டார்.
இச் சிறுவன் இது வரை
காலமும் கடந்து வந்த பாதைகள்
கருக்கு மேடாக காணப்பட்டாலும் அவனது
கனவுகள் மட்டும் ஆலவிருட்சம் போன்று
உள்ளத்தில் படர்ந்திருந்தது. இன்று இவன் தான்
வாழ்ந்த சிறைச்சாலையை விட்டு வெளியேறியதும் கனவுகளும்
விழுது விடத் தொடங்கியுள்ளது. தான்
எதிர்காலத்தில் சித்திரத் துறையில் சிறந்த ஒரு இடத்திற்க்கு
வர வேண்டும் என்று தான் இது
வரை கீறிய சித்திரங்களை எம்மிடம்
காட்டிய போதே புரிந்து கொள்ள
முடிகிறது நிச்சயம் அவன் நல்ல இடத்திற்க்கு
வருவான் என்று.
ஒவ்வொரு
பருவங்களிலும் பிள்ளையின் உடல் விருத்தியானது ஒரு
ஒழுங்கு முறைப்படியே நடை பெற்று வருகிறது.
இதில் சூழலியல் காரணிகளே கணிசமான பங்கை வகிககின்றது. இதனால்
சமூகத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளி லும் அவர்கள்
ஏதோ ஒரு வகையில் ஆட்படுகின்ற
தன்மையானது காணப்படுகின்றது. ஆனால் காப்பாகங்களில் வாழும்
பிள்ளைகள் குறித்த வட்டத்தினுள் குறிப்பிட்ட
சில நபர்களின் ஆதாரவில் இருந்து விட்டு பிற்பட
அவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழமுற்படும் போது
அவாகள் பல சிக்கல்களுக்கு முகம்
கொடுக்க நேரிடும். இதனால் சமுக கட்டமைப்புக்குட்பட்டு
வாழ்வதே சிறுவர்கட்குரிய உளவிருத்திக்கும் எதிர்காலத்துக்கான சிறந்த வழியாக அமையும்.






0 comments:
Post a Comment