NeoCounter

NeoCounter

Monday, November 19, 2012


  மாறாத ஊடகங்களும் மாறிவரும் பெண்களும்


ஆணும் பெண்ணும் சரிநிகர் சமனென உலகில் பலர் கூறுகின்றார்கள். பெண்ணியம் சம்பந்தமாக எத்தனையோ ஆக்கங்கள் வெளிவருகின்றன. பெண்ணியத்திற்காக எத்தனையோ  பேர் குரல் கொடுக்கின்றார்கள். பெண்களும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

எமது யாழ்ப்பாண சமூகத்தில் பெண்ணியம் சற்று மாறுபட்டது. இங்கு அரச அதிபரில் இருந்து பல உயர் பதவிகளிலும் பெண்களே இருக்கின்றார்கள். இத்துடன் பல்கலைக்கழகங்களிலும் உயர் பதவிகளிலும் ஆண்களைவிட பெண்களே அதிகமாகக் காணப்படுகின்றனர். இங்கு எல்லாவற்றிலும் விட புத்துணர்ச்;சி அளிக்க கூடிய செய்தி என்ன தெரியுமா? முன்பு யாழ்ப்பாணத்தில் பெண் ஊடகவியலாளர்களை காண்பது குதிரைக்கொம்பாக இருந்தது. ஆனால் இன்று ஊடகத்துறையில் பணிபுரிவதும் ஊடகத்துறையை கற்பதிலும் அதிகமாக பெண்களே கால்பதித்துள்ளனர்.

குறிப்பிட்ட சில பகுதிகளில் பெண்கள் உயர்வடைந்தாலும் குடும்பத்திலும் சமூக மட்டத்திலும் பல சவால்களையும் பிரச்சனைகளையும் பெண்கள் எதிர்கொள்வதை யாராலும் மறுக்க முடியாது. இன்றும் பல வீடுகளில் பெரியவர்கள் ஏன் படித்தவர்கள் கூட “பொம்பிளையளுக்கு உந்த வேலை சரிவராது. உந்த வேலை சரிவராது உந்த படிப்பு சரிவராது’’ இப்போதும் சொல்வதைக் கேட்க முடியும்.

மேலும் சமூக மாற்றங்களுக்கு முக்கிய ஆயுதமாக காணப்படுவது ஊடகங்களே ஆகும். இவ் ஊடகங்களே இன்று பெண்கள் சார்ந்த விடயங்கள் எதற்கும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. குறிப்பாக 2007ம் ஆண்டு மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனமும் சர்வதேச பத்திரி கையாளர் சம்மேளனமும் கூட்டாக இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தினர். இதில் 2007ம் ஆண்டு பிரசுகிக்கப்பட்ட விடயங்களில் பெண்கள் சார்ந்த விடயங்கள் ஒரு சதவீதத்திற்கு குறைவான விகிதத்திலேயே பிரசுரிக்கப்பட்டன.
இவற்றுக்கு எல்லாம் முக்கிய காரணமாக காணப்படுவது ஆண் பெண் என்றும் அவர்களுக்கு என்று சில இயல்புகளை சில இயல்புகளை பாகு பிரித்து காட்டியமையுமே ஆகும். அதாவது வலிமை வேகம் கொடூரம் போன்ற இடங்களில் ஆண்களையும் நளினம்இ மென்மை, இரக்கம் போன்ற இடங்களில் பெண்களையும் வைத்துக் கொண்டமையுமே ஆகும். இவற்றையே இன்று ஊடகங்களும் தொடர்கின்றன.

2007ம் ஆண்டு கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை பொலிஸார் பலவந்தமாக வெளியேற்றி னர். இந் நேரத்தில் வெளியான செய்திகளில் எல்லாம் சுட்டிக் காட்டப் பட்ட படங்களில் மூட்டை முடிச்சுகளுடன் வீதிகளில்  பெண்கள் அழுதுகொண்டு இருப்பதே காட்டப்பட்டது. இந்த நடவடிக்கையை எதிர் த்து பல கருத்துக்கள் வெளியாகின. இவை அனைத்தும் ஆண்களின் குரல்களே! பெண்களின் குரல்களோ ஒலிக்க வில்லை. இத்தகைய விடயங்களில் பெண்களின் குரல்கள் ஒலிக்காமை பாராபட்சமான செயல். அது மட்டுமன்றி ஊடகவி யலாளர்கள் பால்நிலை உணர்திறனற்று நடக்கின்ற அதே வேளை மக்கள் மன தில் உள்ள எண்ணங்களை நிலை நிறுத்தும் செயலையே செய்கின்றன. இலங்கை போன்ற உள்ளுர் கலவரம் நடக்கும் நாடுகளில் பெண்களின் குரல்கள் ஒலிப் பதில்லை. அழுகுரல்களும் சோகம் ததும்பிய படங்களுக்கும் மட்டுமே பெண்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

மேலும் சினிமாவில் ஆணுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஆண் நடிகர்களுக்குத்தான் அதிக ளவு ஊதியம் வழங்கப்படு கின்றது. ஊடகங்களின் சினி மாப் பக்கங்களில் பெண்களின் கவர்ச்சிப் படங்கள் பத்திரிகை விற்பனையை உயர்த்தும் என்ற எண்ணமே இதற்குக் காரணம். பத்திரிகை களையும் சஞ்சிகை களையும் அதிகம் வாசிக்கும் பழக்கம் ஆண்களை விட பெண்களிடம் தான் அதிகம் காணப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளும் இதழியல் உலகம் அவர்களுக்கு உரிய இடத்தை கொடுப்பது இல்லை.

அத்துடன் கிண்டலுக்கும் கேலிக்கும் பெண்களை பயன்படுத்தும் மரபிலிருந்து ஊடகங்கள் இன்னும்  மீளவில்லை. அண்மையில் வெளியான நாளிதழ் ஒன்றின்   கேலிச் சித்திரத்தில் பெண் வேட்பாளர் ஒருவர் எனக்கு எல்லோரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றார். இதற்க்கு பதிலளித்த மற்றொரு ஆணெருவர் “ என்னால் முடியாதே நான் திருமணம் செய்து விட்டேனே…” என்கின்றார். இது பெண்ணை உடல் சார்ந்து பார்க்கும் மனப்பாங்கே ஊடகவியலாளரிடம் இருப்பதைக் காட்டுகின்றது.

பத்திரிகை சம்பேளனத்தின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் ஜக்குலின் பார்க் குறிப்பிடு கையில் “பெண்கள் பற்றிய விடயங்களுக்கு பத்திரிகை கள் முக்கியத்துவம் அளிப் பதன் மூலம் அது சமூகத்து க்கும் நாட்டுக்கும் முக்கியத்துவமான ஒரு சேவையை செய்கின்றது. பெண்களின் நிலை உயர்ந்தால் குடும்பத்தின் நிலை உயரும். குடும்பத் தின் நிலை உயர்ந்தால் நாடு நலம்பெறும் என்று குறிப்பி டுகின்றார்.

மேலும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது எழுத்தறிவில் இலங்கை சிறந்து விளங்குகின்றது. இலங்கையில் 15வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 89.9 சதவீதம் எழுத்தறிவு உள்ளது. தமிழ்நாட்டில் 64.4 வீதம் ஆகும். பெண்களின் எழுத்தறிவில் இலங்கையில் கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையே அதிகம் வேறுபாடு இல்லை. ஆனால் தமிழ் நாட்டில் நகரம் 76 சதவீதமாகவும் கிராமம் 54 சதவீதமாகவும் உள்ளது. எனவே எதனையும் எதிர்கொள்ளும் துணிச்சலும் மனோபலமும் சவால்களை வென்றெடுக்கும் ஆற்றலும் பெண்களுக்கு வேண்டும். இதற்கு பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது கட்டாயம் ஆகும்.

0 comments:

Post a Comment