NeoCounter

NeoCounter

Sunday, November 25, 2012




சுற்றுலாத்தலமாக மாற்றம் பெற்றுள்ள ஊர்காவற்துறைக்கோட்டை



மரபுரிமைச் சொத்துக்கள் என்பது ஒரு நாட்டின் தொன்மை விழுமியம் என்பவற்றை வெளிப்படுத்தி நிற்க்கும் ஒன்றாகும். இந்தவகையில் பல்வேறு வரலாற்றினை உள்ளடக்கிய பல பழைமையான பொக்கிஷங்கள் எம் யாழ் மண்ணில் இன்றும் உள்ளன. அந்த வகையில் ஊர்காவற்துறை கடற் கோட்டையானது ஊர்காவற்துறையையும் காரைநகரினையும் பிரிக்கும் ஆழமான கடலின் மத்தியில் போர்த்துக்கீசரினால் கட்டப்பட்டுள்ளது. இக் கோட்டையானது இன்று  வரலாற்றில் முக்கியமான ஒரு இடம் பெறுகிறது.

இலங்கையில் ஐரோப்பியரால் அமைக்கப்பட்ட இக்கோட்டையானது  ஹம்மன்ஹீல் என்றும் பூதத்ததம்பி கோட்டை என்றும்  அழைக்க ப்படுகிறது. பாக்கு நீரினையூடாக சென்ற பன்னாட்டு கடற்பாதையில் இருந்து யாழ்ப்பாண பரவைக் கடலில் நுழையும் வழியை அரண் செய்தது இக் கோட்டை. வடக்கில் கோடிக்கரைக்கோ நாக பட்டணத் துக்கோ போய் அங்கிருந்து கிழக்காக, பத்தாவது அகலக் கோட்டை பின்பற்றி தென்கிழக்காசியாவுக்கும் சீனாவுக்கும் போகலாம். நேர் வடக்கில் இந்தியாவின் கிழக்கு கரையோரமாக எந்த துறை முகத்திற்கும் போக முடியும் மேற்கு திசையில் தொண்டிஇ அதிராம் பட்டிணத்திற்கும் தென் கிழக்கிற்கு யாழ்ப்பாணத்திற்கும் போகலாம்.


ஓல்லாந்தரால் சிறந்த முறையில் பேணிப் பாதுகாக்கப்பட்ட இக்கோட்டையானது  1795 இல் பிரிட்டிஸ் காரரினால் கைப்பற்ற ப்பட்டதன்  பிற்பாடு சிறைக் கூடமாகவும்இ மருத்துவ நிலையமாகவும் பாவிக்கப்பட்டு வந்தது. கடலில் கப்பல் மூலம் போவோர் வருவோருக்கு நுழைவுச்சீட்டு இக்கோட்டையில் வைத்து வழங்கப்பட்டது. நாட்டிற்கு கப்பல் மூலம் வரும் பகையை இக்கோட்டை காத்து நின்றது. இங்கு வைத்து கப்பல்கள் ஆராய்ந்து சோதனை செய்யப்பட்டது. இதே வேளை இந்தியாவில் இருந்து குடியேறுபவர்களை பொது சுகாதாரத்திற்கு என்று தனிமைப்படுத்தும் நிலையமாகவும் இக் கோட்டை விளங்கியது.  சில காலம் இது தொல்லியல் திணைக்களப்பொறுப்பில் இருந்தது. இங்கு பிரிட்டிஸ் காலத்தில் சிறைக்கூடமாக பயன்படுத்தப்பட்ட இக்கோட்டையில் ஆயுள் தண்டைனை கைதிகளே சிறைப்படுத்தப்படுத்தப்படுத்தப்பட்டார்கள். ஆங்கிலேயர் காலத்தில் ஊர்காவற்றுறை முக்கிய கடற்படைத்தளமாக விளங்காத போதும் பிரதான சுங்கப் பரிசோதனை நிலையமாகவும் இது  விளங்கியுள்ளது.

 அழகிய பன்றிக்கால் வடிவில் அமைந்துள்ள இக்கோட்டையானது ஒல்லாந்தர் காலத்தில் நாட்டைப் பாதுகாக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டதாகவும்  முதன்முதலில் அமிநால் டெமென்சிஸ் என்ற போர்த்துக்கேய தளபதியால் 17 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும் ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும்  இயற்கை அழகுடன் கடலின் மத்தியில் கம்பீரமான தோற்றத்தோடு உள்ள இக் கோட்டை  உல்லாச பயணிகளை பார்த்தவுடன் கவரும் ஒரு இடமாக உள்ளது.
 பிரிட்டிஸ் காலத்தில் இருந்து சிறைக்கூடமாக பயன்படுத்தப்பட்ட இக் கோட்டை இன்று சுற்றுலாத் தலமாகவும் வரலாற்று பொக்கிசமாகவும்  மாற்றம் பெற்றுள்ள  போதிலும்; இக் கோட்டையை இன்று  உள்ளே சென்று பார்ப்பது என்பது மிகவும் கஸ்ரமான விடயம். ஏனெனில்  இவ் இடமானது இன்று இலங்கை இராணுவத்தின் கடற்படைத்தளமாக உள்ள அதே நேரம் கடற்படையினர் இந்தியாவை கண்காணிக்கும் முக்கிய கடற்படை மையமாக இதனை அமைத்துள்ளதால்  இங்கு செல்வதற்க்கு பல பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளன. இதனால் இவ் இடம் அழகான முறையில் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டும் எவருமே அறியாது உள்ளது என்பது துரதிஷ்டமான விடயமே .....





















0 comments:

Post a Comment