NeoCounter

NeoCounter

Wednesday, July 27, 2011

நாவலடி பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிரந்தர வீட்டுத்திட்ட வேலைகள்.

      நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நாவலடி பிரதேசத்தில் நிரந்தர வீPட்டுத்திட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கிந்தஸ்தான் பிறைவற் லிமிட்டட் நிறுவனத்தினாலேயே இவ் வேலைகள் இடம்பெற்று வருகின்றன.                              
      இது தொடர்பாக நல்லூர் பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் குறிப்பிடுகையில், நாவலடி, பூம்புகார்,முனங்கு போன்ற பகுதிகளை உள்ளடக்கியதாக அரியாலை கிழக்கு பிரதேசமானது உள்ளது. இதில் 250க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 
                            
      இதில் காணி உரிமை உடையோர், அதிக அங்கத்தவர்களை கொண்ட குடும்பம், இறுதி யுத்தில்; பாதிக்கப்பட்டவர்கள், ஊனமுற்றவர்கள், என்ற அடிப்படையில் முதல் 50 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கட்க்;கு அமைக்கப்படும் வீடுகள் ஒவ்வொன்றும் 2அறைகளையும் 1சமையலறையும் உள்ளடக்கியதாக உள்ளது.
     1995ம் ஆண்டு யுத்தம் காரணமாக இப்பிரதேசதி;தில் இருந்து இடம் பெயர்ந்த மக்களுக்கே இந் நிரந்தர வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றது
    அரியாலை கிழக்கு பிரதேசமானது இது வரை காலமும் உயர் பாதுகாப்பு வலையமாக காணப்பட்டது. தற்போது இப் பிரதேசத்தில் இருந்து இரானுவத்தினர் வெளியேறியுள்ளதால் மீண்டும் மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
     இவர்கடக்;கு முன்னர் தற்காலிக வீடமைப்பிற்காக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 12 தகரங்கள் வீதம் 40 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது. இருப்பினும் தற்காலிக வீடுகள் எதுவும் அமைக்கப்படவில்லை.
   மூன்று மாத திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீட்டுத்திட்ட வேலைகள் முடிவடைந்தவுடன் அரியாலை கிழக்கில் உள்ள ஏனைய பகுதிகளுக்கான  வீட்டுத்திட்ட வேலைகள் ஆரம்பிக்கபடும் எனவும் கூறிப்பட்டார்.

0 comments:

Post a Comment