மண்டைதீவு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார் யாரோ ?
மண்டைதீவு பிரதேசத்தின் நிலை பற்றிய ஒரு நேரடிப்பார்வை....
யுத்தம் தந்த வேதனைகள் நெஞ்சின் ஓரமாக இருந்தாலும் சொந்த இடம் செல்வதே இனி கிடைக்கப் போகும் ஒரே நிம்மதி என்ற ஏக்கத்துடன் இன்றும் இம் மண்ணில் வாழ்வோர் பலர். கடந்து வந்த பாதைகள் துயரம் நிறைந்ததாக காணப்பட்டாலும் தொடரும் வாழ்க்கையும் ஏக்கத்துடனேயே இவர்களை நிற்க்க வைத்துள்ளது.இன்று மீளக்குடியமர்வு என்னும் பெயரில் தமது சொந்த இடங்களுக்கு சென்று வாழ்வோரில் பலர் இன்றும் பலரிடம் உதவிக் கரம் நீட்டி நிற்க்கும் துயரத்தையே காணமுடிகின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து 5 கிலோ மீற்றர் தூரத்தில் இருககிறது மண்டை தீவு பிரதேசம்.கடலினால் சூழப்பட்ட இப் பகுதிக்கு நகரில் இருந்து செல்லும் போது காப்பெற் வீதியில் வேகமாக செல்லும் வாகனங்கள் இப் பகுதியை அண்மித்ததும் மெது மெதுவாக நகரத் தொடங்கி விடுகின்றன. பல வருடங்களாக மழையையே கண்டிராதது போல் வரண்ட நிலையில் காட்சியளிக்கும் இவ் ஊரின் வாயிலிலேயே எம்மை வரவேற்று நிற்கின்றன இறந்து கிடக்கும் கால்நடைகள். ஊரிற்க்குள் நுழைந்தவுடன் அடுக்கடுக்காய் தெரியும் கட்டடங்கள் நெருங்கிய போது தான் புரிகின்றது அவை வெறுமையான நிலையில் உள்ள உடைந்த சுவர்கள் என்று.
இப் பகுதியின் இன்றைய நிலைக்கு மரியாம் பிள்ளை எலிசபெத் (வயது 85) என்ற அம்மாவின் கதையே எடுத்துக்காட்டாகும். கடந்த 22 வருடங்களின் வருடங்களின் பின்னர் மீளவும் எமது சொந்த வீட்டில் காலடி எடுத்து வைத்து விட்டோமே ஒன்ற சந்தோசம் இவருக்கு ஒரு புறம் இருந்தாலும் தமது வறண்ட இப் பூமியில் தனது வருங்கால வாழ்வும் வறண்டு போய் விடுமோ என்ற ஏக்கம் அதிகமாக இழையோடியுள்ளது.

1988 ம் ஆண்டுகளில் பதின் மூன்று பிள்ளைச் செல்வங்களுடன் நிம்மதியாக வாழ்ந்து வந்த இவர்களது குடும்பம் யுத்தம் என்னும் புயலில் அகப்பட்டு இன்று சின்னா பிண்ணமாகியதால் இவர் ஒரு தனிமரமாகி தவிர்த்துக் கொண்டிருக்கின்றார். 90 களில் இப் பகுதியை விட்டு இடம் பெயர்ந்து வன்னிக்கு சென்ற இவர் இன்று யுத்ததில் தனது கணவனையும் நான்கு பிள்ளைகளையும் பறிகொடுததுவிட்டார். இவருக்கு இன்று துணையாக இருப்பது இரு சிறிய பெடடிக்கடையே.கடற்படையினரின் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மண்டை தீவு பிரதேசத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும கடந்த 2004ம் ஆண்டு மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டார்கள். இதன் போது இவரும் 5ம் வட்டாரப்பகுதியில் உறவினர் வீட்டில் வந்து குடியேறினார். மீண்டும் தொடர்ச்சியான யுத்தம் இவர்களை இடப்பெயரச் செய்தது. கடந்த தை மாதம் மக்கள் மீளவும் இப்பகுதி முழுவதும் குடியமர்த்தப்ப்டுள்ளார்கள்.
இன்று இவரது பிள்ளைகள் ஒவ்வொருவரும் குடும்பமாகி திசைமாறி சென்றதன் பின்னர் தனது வயிற்று பிழைப்புக்காக தான் வைத்திருந்த 5 பவுண் நகையை வெறும் 60 ஆயிரம் ரூபாவுக்கு விற்றுள்ளார். இவரது அறியாமையை சாதகமாக்கி அவரை யாரோ ஏமாற்றிச் சென்றுவிட்டதை உணர முடிந்தது. இப்பபோது கிடைத்த பணத்தைக்கொண்டு ஒரு சிறிய பெட்டிக்கடை போட்டு தன் வாழ் நாளை ஓட்டி வருகின்றார்.
“மாளிகையாக இருந்த என்ர வீடு இன்று தர மட்டம் ஆன பிறகும் இது வரை ஒரு தற்காலிக வீடோ அல்லது வீட்டுத்திட்டத்திற்கான ஒரு பதிவுகளோ இன்று வரை பதியப்படவில்லை. பிச்சை சம்பளமாக 2 தரம் நூறு ரூபா தந்தாங்கள் பிறகு அதுவும் நிப்பாட்டிப் போட்டாங்கள். வாக்காளர் சீட்டில இருந்த என்ர பெயர் இப்ப திடீரென்று காணாமல் போட்டுது. நிவாரண முத்திரை குறிப்பிட்ட சிலருக்கு கொடுக்கிறாங்க நாங்கள் போய் கேட்டால் வரும் வரும் என்டுறாங்களே ஒழிய இது வரை வந்த பாடில்ல. குடிக்கிறதுக்கு கூட தண்ணி காசு கொடுத்தாலும் கிடய்க்கிற பாடில்ல .இதனால எனர் பிள்ளை ஆசையாய் வளர்த்த மாடுகள் எல்லாம் என்ர கண் முன்னாடியே செத்துப்போச்சு. வருத்தம் எதும் வந்தால் அவசரத்துக்கு போறதுக்கு ஒரு ஆஸ்பத்திரி கூட இப்ப இல்லை. ஆனால் 90களில் தீவுப்பகுதிகளில் மிகப் பெரிய வைத்திசாலை இங்க தான் இருந்திச்சு. .ஆனால் இன்று அதை ஆமிக்காரன் தன்ர முகாம் ஆக்கி போட்டான். என்று தமது ஊரின் நிகழ்கால வாழ்க்கை நிலையை வார்த்தையளால் கொட்டித் தீர்த்தார்.

இன்று இவரது பிள்ளைகள் ஒவ்வொருவரும் குடும்பமாகி திசைமாறி சென்றதன் பின்னர் தனது வயிற்று பிழைப்புக்காக தான் வைத்திருந்த 5 பவுண் நகையை வெறும் 60 ஆயிரம் ரூபாவுக்கு விற்றுள்ளார். இவரது அறியாமையை சாதக மாக்கி அவரை யாரோ ஏமாற்றிச் சென்றுவிட்டதை உணர முடிந்தது. இப்பபோது கிடைத்த பணத்தைக்கொண்டு ஒரு சிறிய பெட்டிக்கடை போட்டு தன் வாழ் நாளை ஓட்டி வருகின்றார்.
“மாளிகையாக இருந்த என்ர வீடு இன்று தர மட்டம் ஆன பிறகும் இது வரை ஒரு தற்காலிக வீடோ அல்லது வீட்டுத்திட்டத்திற்கான ஒரு பதிவுகளோ இன்று வரை பதியப்படவில்லை. பிச்சை சம்பளமாக 2 தரம் நூறு ரூபா தந்தாங்கள் பிறகு அதுவும் நிப்பாட்டிப் போட்டாங்கள். வாக்காளர் சீட்டில இருந்த என்ர பெயர் இப்ப திடீரென்று காணாமல் போட்டுது. நிவாரண முத்திரை குறிப்பிட்ட சிலருக்கு கொடுக்கிறாங்க நாங்கள் போய் கேட்டால் வரும் வரும் என்டுறாங்களே ஒழிய இது வரை வந்த பாடில்ல. குடிக்கிறதுக்கு கூட தண்ணி காசு கொடுத்தாலும் கிடய்க்கிற பாடில்ல .இதனால எனர் பிள்ளை ஆசையாய் வளர்த்த மாடுகள் எல்லாம் என்ர கண் முன்னாடியே செத்துப்போச்சு. வருத்தம் எதும் வந்தால் அவசரத்துக்கு போறதுக்கு ஒரு ஆஸ்பத்திரி கூட இப்ப இல்லை. ஆனால் 90களில் தீவுப்பகுதிகளில் மிகப் பெரிய வைத்திசாலை இங்க தான் இருந்திச்சு. .ஆனால் இன்று அதை ஆமிக்காரன் தன்ர முகாம் ஆக்கி போட்டான். என்று தமது ஊரின் நிகழ்கால வாழ்க்கை நிலையை வார்த்தையளால் கொட்டித் தீர்த்தார்.
இப் பகுதி மக்கள் இன்று எதிர்கொள்ளும் இப் பிரச்சனைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி இப் பகுதி பிரதேச செயலாளர் ஆர். ரமேஸ் அவர்களிடம் கேட்ட போது, இப் பகுதியில் இன்று 500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சேவாலங்கா நிறுவனத்தின் உதவியுடன் தற்காலிக வீட்டுத்திட்டம் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே செய்து கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக j/07 பிரிவில் 9பேருக்கும் j/09 பிரிவில் 18பேருக்குமே தற்காலிக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு ள்ளன.ஏனையோரின் நிலை பற்றி பிரதேச சபையிடம் அறிவிக்க ப்பட்டுள்ளது .மேலும் முதியோர் கொடுப்பனவில் இன்றும் குழப்ப நிலை தொடர்கிறது. விரைவில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இங்கு 110க்கு மேற்பட்ட பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் உள்ள போதும் இது வரை அவர்களுக்குரிய உதவிகள் எவையும் வழங்கப்படவில்லை” எனவும் குறிப்பிட்டார்.நன்னீர் வளம் அற்ற பகுதியில் வாழும் இம் மக்கள் 20 லீற்றர் தண்ணீரை 15ரூபாவுக்கு வாங்கி குடிக்க வேண்டிய இக்கட்டான நிலையிலேயே வாழ்கின்றார்கள். அதுவும் கூட இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் கிடைக்கின்றது. மின்சார வசதியற்று இருக்கும் இப் பகுதியில் உள்ள ஒரு சிலரது முயற்சியால் பட்டறை எஞ்சின் மூலமாக மின்சாரம் கொடுக்கப்படுகின்றது . 60w மின்குமிழ் ஒன்றுக்கு மாதம் 500 ரூபா செலுத்த வேண்டும்.

இது பற்றி இக்கிராம வாசியான ஜெயசீலன் சூசைப்பிள்ளை குறிப்பிடும் போது, "நாங்கள் மூன்று மின்குமிழ் பாவிக்க மாதம் 1000 ரூபா கொடுக்கிறம். புpள்ளையள் எப்படியாச்சு படிக்க வேணும் என்டதால் இதை கஸ்ரப்பட்டு கொடுத்தன். இப்ப என்ர பிள்ளைக்கு கம்பஸ் கிடைச்சதால பட்ட கஸ்ரத்துக்கு எல்லாம் பலன் கிடைச்சிருக்கு என்ற ஒரு சந்தோசமே போதும் “என பெரு மூச்சு விட்டார்.இன்று வறண்ட பூமியாக காட்சியளிக்கும் இப் பகுதியில் தேர்தல் காலங்களில் மட்டுமே ஆதரவு கேட்டு செல்வோர் இன்று வரை இவர்களது வாழ்க்கைக்கு ஆதரவுக் கரம் கொடுக்காது இருப்பது துயரமான ஒரு விடயமே.....தற்காலிக வீடுகள் எவையும் கட்டிக் கொடுக்கப்படாது சிறிய கொட்டிலில் குடியேறி இருக்கும் இவரிடம் தற்காலிக வீடு அமைத்து தராது எப்படி குடியேறினீர்கள் எனக் கேட்டதற்க்கு “ நாங்கள் எங்கட சொந்த ஊரிலேயே 3ம் வட்டாரத்தில் இருந்து 5ம் வட்டாரத்துக்கு வரவே 8 வருடங்கள் காவல் இருந்தம். இனியும் வீடு இல்ல எண்டு போட்டு வேறயாக்களின்ர வீடுகளில் இருந்தால் 4 சுவரோடு கிடக்கிற சொந்த காணியையும் விட்டு நடுத்தெருவில தான் நிற்கனும். அதால தான் கடன் பட்டு இந்த கொட்டில போட்டு இங்க இருக்கிறன் “ என்று தனது சோகத்தை எம்மிடம் கொட்டினார்.
இன்று வறண்ட பூமியாக காட்சியளிக்கும் இப் பகுதியில் தேர்தல் காலங்களில் மட்டுமே ஆதரவு கேட்டு செல்வோர் இன்று வரை இவர்களது வாழ்க்கைக்கு ஆதரவுக் கரம் கொடுக்காது இருப்பது துயரமான ஒரு விடயமே..

1 comments:
http://kananiinfor.blogspot.com/
Post a Comment